‘கல்யாணத்த நிறுத்துங்க’.. தாலி கட்டும்போது கையில் குழந்தையுடன் வந்த பெண்..! சினிமா பாணியில் நடந்த பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 12, 2019 05:22 PM

தாலி கட்டும் நேரத்தில் கையில் குழந்தையுடன் வந்து திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Dramatic incident happen in marriage function in Madurai

மதுரை மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (29). இவருக்கும் பவித்ராதேவி என்ற பெண்ணுக்கு இன்று மாட்டுதாவணியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. தாலி கட்டும் சமயத்தில் மண்டபத்துக்கு கையில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் ‘கல்யாணத்தை நிறுத்துக்க’ என கூறியுள்ளார். இதனைக் கண்டு மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் அவரை விசாரித்ததில், விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஈஸ்வரி (37) என்பதும், அவருக்கும் முனியாண்டிக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று ஈஸ்வரி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் முனியாண்டியால், தான் 2 மாத கர்ப்பமாக உள்ளதாக மண்டபத்தில் இருந்தவர்களிடம் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். இதற்கு முனியாண்டி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததைப் பார்த்த மணப்பெண் உடனே கல்யாணத்தை நிறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரு வீட்டாரும் காவல் நிலையம் சென்றுள்ளனர். அங்கு மணப்பெண்ணின் தந்தை, தங்களை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இருவரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு திருமணத்துக்கு செலவழித்த பணத்தை மட்டும் வழங்குமாறு கேட்டுகொண்டார். இதனை அடுத்து முனியாண்டி ஆசிரியை ஈஸ்வரியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டதை அடுத்து மூன்று தரப்பினரையும் சமரசம் பேசி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். சினிமா பாணியில் தாலி கட்டும் சமயத்தில் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MARRIAGE #MADURAI #WOMAN #GROOM