‘சமையலின்போது திடீரென பறந்த குக்கர் விசில்’.. ‘பெண்ணுக்கு நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 10, 2019 12:16 PM

சமையலின்போது குக்கர் விசில் பறந்து பெண் ஒருவரின் கண்ணுக்கும் மூளைக்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman blinded after cooker whistle exploded into her skull

ஜார்க்கண்ட் மாநிலம் ஹண்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குக்கரில் பருப்பை வைத்துவிட்டு வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது குக்கர் பலமுறை விசில் அடித்தும் பின்னால் இருந்த அவருக்கு அந்த சத்தம் கேட்காமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு சமையலறைக்கு வந்த அவர் குக்கரை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக குக்கரின் விசில் பறந்து வந்து அந்தப் பெண்ணின் இடது கண் பகுதியைத் துளைத்து தலைக்குள் சென்றுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்த விசில் அவருடைய கண்ணிற்கும், மூளைக்கும் இடையே சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தலையில் சிக்கியிருந்த விசில் நீக்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு இதில் இடது கண் பார்வை பறிபோயுள்ளது.

Tags : #JHARKHAND #COOKER #WHISTLE #WOMAN #BLIND #EYE #SKULL #BRAIN #SHOCKING