காப்புக்காட்டுக்குள் சென்ற கள்ள ஜோடி... திடீரென நுழைந்து, பலாத்காராம் செய்த 6 பேர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 18, 2019 05:58 PM

சேலம் அருகே உள்ள வாழப்பாடி, சின்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் 25 வயதான தினேஷ். திருமணமான இவர், அங்குள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அதே கம்பெனியில் பணிபுரியும் திருமணமான 32 வயது பெண் ஒருவருடன் தினேசுக்கு தொடர்பு ஏற்பட்டது.

woman abused by a gang when she was with her affair

இதனையடுத்து இருவரும் சேலம் அருகே உள்ள நெய்யமலை காப்புக்காடு வனப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று தினேஷின் பைக்கை பார்த்ததும், பைக் கவரை சோதனை செய்துள்ளனர். அதில் ரேஷன் கார்டு ஒன்று இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அந்த கும்பல் தினேஷும் அந்த பெண்ணும் இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அங்கிருந்த தினேஷை அடித்துப் போட்டுவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அடி வாங்கிய தினேஷ் மலையடிவாரத்துக்கு ஓடிப்போய் மக்களை அழைத்துவந்துள்ளார்.

உடனே அந்த கும்பல் தப்பியோடியது. அதன் பின்னர் போலீஸார் அங்கு வந்தனர். தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த 6 பேரில் முதலில் 4 பேரை பிடித்துவிட்டனர். பிறகு மீதம் இருந்த இரண்டு பேர் பற்றியும் விசாரித்து கைது செய்துள்ளனர்.

Tags : #SEXUALABUSE #WOMAN #BIZARRE #SELAM