‘மாத்திரை சாப்பிட்டும் தீராத தலைவலி’.. பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 11, 2019 04:24 PM

கடுமையான தலைவலியின் காரணமாக 15 மாத்திரை உட்கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru woman takes 15 tablets for headache, dies

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் முனேஷப்பா-அனுசுயம்மா தம்பதி. இவர்களுக்கு சோபா என்ற மகள் உள்ளார். அனுசுயம்மா கடந்த 15 வருடங்களாக அடிக்கடி ஏற்படும் தலைவலிக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல அவருக்கு தலைவலி வந்துள்ளது. அப்போது ஒரு தலைவலி மாத்திரையை அனுசுயம்மா உட்கொண்டுள்ளார். ஆனாலும் அவருக்கு தலைவலி தீராத நிலையில் 15 மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகள் ஷோபா, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுசுயம்மா சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து அனுசுயம்மாவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைவலியின் காரணமாக 15 மாத்திரை உட்கொண்டு பெண் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #BENGALURU #WOMAN #DIES #HEADACHE #TABLETS