'நான் வேண்டாம்னு சொன்னாப்புறமும்.'...'வெக்கமே இல்லாம என்னோட சேந்து நின்னு'.. ஆவேச ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 13, 2019 03:45 PM

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலேவை வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் தொந்தரவு செய்ததாக அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MP Supriya Sule Complaints on a Call Taxi Driver for his act

மும்பையில் உள்ள தாதர் ரயில்வே நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த சுப்ரியா சுலேவை வழிமறித்து, வாடகை கார் ஓட்டுநர் ஒருவர், வாடகைக் கார் வேண்டுமா என கேட்டுள்ளார். ஆனால் தனக்கு கார் தேவையில்லை என மறுத்துவிட்டு, நடையைக் கட்ட முயற்சித்தபோதும் அந்த நபர் தொடர்ந்து பின்னாலேயே வந்ததால், அங்கிருந்த ரயில்வே போலீஸாரிடம் சுப்ரியா சுலே புகார் அளித்தார்.

இதுபற்றி தனது ட்விட்டரில் பேசிய சுப்ரியா சுலே, வாடகைக் கார் ஓட்டுநரான குல்ஜீத் சிங் மல்ஹோத்ரா என்பவர், ரயில்வே ஸ்டேஷனில் தனனிடம் வாடகைக் கார் வேண்டுமா என தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், தான் கார் வேண்டாம் என மறுத்துவிட்டு அடுத்த அடிசெல்ல முற்பட்டபோது, வெட்கமே இல்லாமல் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அவர் முயற்சித்ததாகவும் சுப்ரியா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி பியூஷ் கோயலிடம், ட்விட்டர் மூலம் சுப்ரியா, ரயில்வே வளாகம், விமான நிலையம் போன்றவற்றினுள் எதற்காக இப்படி வாடகைக் கார் வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து முறையான டிக்கெட், சீருடை இல்லாமை உள்ளிட்ட காரணங்களுக்கான பிரிவில் அந்த வாடகைக் கார் ஓட்டி மீது வழக்கு தொடரப்பட்டது, இனியும் இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என தாதர் ரயில் நிலைய பாதுகாப்பு போலீஸ் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : #SUPRIYA SULE #CARDRIVER #BIZARRE