‘சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை’ வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 19, 2019 10:14 AM

சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Woman dies after wall collapses due to heavy rain in Chennai

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு முதல கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேலும் கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக 9 செமீ மழை பதிவானது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஐயப்ப  செட்டி தெருவில் அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த ஜெரினா பானு (42 என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். விடிய விடிய பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலியான் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAIRAINS #WOMAN #DIES #WALLCOLLAPSES #RAINALERT