‘குளியலறையில் செல்ஃபோன் பயன்படுத்திய’.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Sep 19, 2019 12:47 PM
குளியலறையில் சென்ஃபோன் பயன்படுத்திய இளம்பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரைச் சேர்ந்த 26 வயதான எவ்ஜீனியா சுல்யாதியேவோ என்பவர் தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்ட்டாக வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டிலுள்ள குளியலறைக்குச் சென்ற எவ்ஜீனியா குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் உள்ள மின் இணைப்பில் செல்ஃபோனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளிக்கத் தொடங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது செல்ஃபோன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து எவ்ஜீனியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீண்ட நேரமாகியும் குளிக்கச் சென்றவர் வராததால் உள்ளே சென்று பார்த்த அவரது தாய் எவ்ஜீனியா குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
