‘அதிவேகத்தில்’ டிவைடர்மீது மோதி... மேம்பாலத்திலிருந்து ‘தலைகுப்புற’ கீழே விழுந்த கார்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 18, 2020 06:55 PM

தெலுங்கானாவில் மேம்பாலத்திலிருந்து கார் ஒன்று அதிவேகமாக கீழே விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad Video Car Crashes Into Divider Falls Off Flyover

ஹைதராபாத்தில் உள்ள பரத்நகர் மேம்பாலத்தின் கீழ் இன்று அதிகாலை சிலர் நின்று கொண்டிருந்தபோது, மேலிருந்து கார் ஒன்று அதிவேகத்தில் தலைகுப்புற கீழே விழுந்துள்ளது. இதில் காரிலிருந்த இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காரிலிருந்த 5 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்தவர்கள் மூசாபேட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, டிவைடரில் கார் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

 

Tags : #ACCIDENT #TELANGANA #CCTV #CAR #FLYOVER