விபத்தில் சிக்கி மரணமடைந்த 'கர்ப்பிணி' நாய்... உடனடியாக 'அறுவை சிகிச்சை' செய்து... நெகிழச்செய்த மருத்துவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 19, 2020 02:30 PM

விபத்தில் சிக்கி மரணமடைந்த கர்ப்பிணி நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளையும் கால்நடை மருத்துவர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Near Vellore, 5 Puppies rescued alive from dead dog Stomach

வேலூரில் நேற்று முன்தினம் சாலையைக் கடக்க முயன்ற கர்ப்பிணி நாய் ஒன்று விபத்தில் சிக்கியது. அப்போது அந்த வழியாக வந்த தண்டபாணி என்பவர் நாயை மீட்டு அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். அங்கு நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்து போனது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளையும் உயிருடன் மீட்டனர். அருகில் இருந்த கடையில் இருந்து பால் பாட்டில் வாங்கி வந்து அந்த குட்டிகளுக்கு பால் புகட்டப்பட்டது.

இதையடுத்து நாயை மருத்துவமனைக்கு எடுத்து வந்த தண்டபாணி என்பவரே அந்த 5 குட்டிகளையும் தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று பராமரித்து வருகிறார். இந்த செயல் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது. 

Tags : #ACCIDENT