"வீட்ல அம்மா சௌக்கியமா?..." என்று கேட்டபடி... 'கம்மாய்க்குள்' பேருந்தை விடும் 'டிரைவர்களுக்காக'... 'கோவையில்' விதிக்கப்பட்ட வித்தியாசமான 'தடை'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேருந்தில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் ஓட்டுநர் பேச தடை விதித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கோவை மண்டலத்துக்குட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 2 ஆயிரத்து 700 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டும் 1,190 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் பகல் நேரங்களில் ஓட்டுனர்கள் பெண்களை கண்டக்டர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதிப்பதாலும், பெண்களுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை தடுக்கும் விதமாக கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பதில்லை. மேலும் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசுவதும் இல்லை.
