35 ‘ஐடி’ ஊழியர்களுடன் கிளம்பிய பேருந்து... ‘சுற்றுலா’ சென்றவர்களுக்கு... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 16, 2020 03:08 PM

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாறையில் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Karnataka Accident Bus Carrying 35 IT Employees Crashes Into Rock

மைசூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் 35 பேர் நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்றில் மங்களூரு மற்றும் சிக்மகளூருவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். முதலில் சிக்மகளூவில் உள்ள பல இடங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் அங்கிருந்து மங்களூருவிற்கு கிளம்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அவர்களுடைய பேருந்து உடுப்பி மாவட்டம் கார்காலா அருகே சென்று கொண்டிருந்தபோது, மலைப்பாதை வளைவு ஒன்றை கவனிக்கத் தவறிய ஓட்டுநர் பேருந்தை பாறையில் மோதியுள்ளார்.

இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கி, அதில் பயணம் செய்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 27 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி ஐடி ஊழியர்கள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #IT #KARNATAKA #TOUR #ITEMPLOYEE #CRASH