‘டி20 உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வா?’... 'விராட் கோலி அதிரடி பதில்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை டி20 போட்டிக்குப் பிறகு, ஓய்வு பெறுவீர்களா என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, வரும் வெள்ளிக்கிழமை டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் 31 வயதான இந்திய கேப்டன் விராட் கோலியிடம், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு பின்னர், ஏதாவது ஒரு வடிவப் போட்டியில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் எண்ணம் உண்டா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விராட் கோலி, ‘அப்படி ஒரு சிக்கல் தனக்கு இல்லை என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் தீவிரமாக விளையாடுவேன்’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘மூன்று ஆண்டுகளில் நடைபெற உள்ள இரண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் முழு கவனம் செலுத்த உள்ளதாக’ விராட் கோலி கூறியுள்ளார்.
தனக்கு சோர்வு மற்றும் பணிச்சுமை இருந்தாலும், வருடத்தில் 300 நாட்கள் கிரிக்கெட்டிற்காக ஒதுக்கி கடினமாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ள கோலி, அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அணிக்கு தனது பங்களிப்பு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ‘இனி உடல் தாங்காது என்று நினைக்கும் போது அல்லது தன்னுடையை 34 அல்லது 35-வது வயதில் வேண்டுமானால் அடுத்தக் கட்ட முடிவை பரீசிலிப்பேன்’ என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்
