லாரி ‘மோதியதில்’ மேம்பாலத் தடுப்பை ‘உடைத்துக்கொண்டு’... ‘50 அடி’ பள்ளத்திற்குள் ‘பாய்ந்த’ கார்... ‘காப்பாற்ற’ சென்றவர் உட்பட 3 பேருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 16, 2020 11:23 PM

தெலுங்கானாவில் மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Hyderabad 2 Dead After Car Falls Off Bridge After Collision

கரீம்நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் தன் மனைவி சுவரூபாவுடன் இன்று காலை அழுகுநூர் மேம்பாலம் வழியாக காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்திற்குள் பாய்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதில் படுகாயமடைந்த அவருடைய மனைவி சுவரூபா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க முயற்சித்த காவலர் ஒருவர் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags : #ACCIDENT #TELANGANA #POLICE #HYDERABAD #COLLISION #BRIDGE