‘வினையாக’ முடிந்த விளையாட்டு... தாயின் ‘சேலையை’ வைத்து விளையாடிய... 12 வயது ‘சிறுவனுக்கு’ நேர்ந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 17, 2020 10:02 PM

நாகர்கோவிலில் தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடும் போது சேலையில் கழுத்து இறுகி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

Kanyakumari 12 YO Boy Playing In Saree Swing With Chokes To Death

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மகன் ஆண்ட்ரூ (12) அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஆண்ட்ரூ வீட்டில் தன் தாயின் சேலையை ஊஞ்சல் போல கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் ஆண்ட்ரூவின் கழுத்து இறுகி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடும் போது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #SCHOOLSTUDENT #KANYAKUMARI #BOY #MOTHER #SAREE #SWING