‘வேளாங்கண்ணி’ கோயிலுக்கு சென்ற குடும்பம்.. ‘பாதிவழியில் பஞ்சரான கார்’.. நொடியில் நடந்த கோரவிபத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 17, 2020 12:38 PM

தென்காசி அருகே ஆம்னி பேருந்து கார் மீது மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Three killed in private bus collision with car near Tenkasi

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சேகர் என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வந்துகொண்டு இருந்துள்ளனர். அவர்கள் வந்த கார் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வந்தபோது பஞ்சாரிகி பழுதடைந்துள்ளது. இதனால் வேறு காரை வரவழைத்து உறவினர்களை அதில் கேரளாவுக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் ரெகவரி வேன் மூலம் காரை எடுத்துச் செல்ல முடிவடுத்து அந்த வாகனம் வரழைக்கப்பட்டுள்ளது. பின்னர் கயிறு கட்டி காரை இழுக்க தயாராக இருந்துள்ளனர். அப்போது சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று காரின் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் ரெகவரி வேன் டிரைவர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பழுதடைந்த காரை ரெகவரி வேன் மூலம் மீட்கும்போது பேருந்து மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.