‘போலீசில்’ சேர ஆசை... ‘இன்ஜினியரிங்’ பட்டதாரி செய்த ‘அதிர்ச்சி’ காரியத்தால்... ‘கடைசியில்’ நேர்ந்த ‘கோரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 18, 2020 05:24 PM

பல்லடம் அருகே போலீசாரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Tiruppur Fake SI Died In Accident While Trying To Escape Police

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலீஸ் உடை அணிந்த இளைஞர் ஒருவர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்மீது உள்ளூர் மக்களுக்கு சந்தேகம் ஏற்படவே, அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரித்ததில், அந்த இளைஞர் போலியாக போலீஸ் உடை அணிந்து பணம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்போது வேலம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த இளைஞரின் இருசக்கர வாகனம் முன்னால் சென்ற சரக்கு வேனின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

அதன்பிறகான விசாரணையில், உயிரிழந்த நபர் பல்லடம் அனுப்பட்டி அருகே உள்ள கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான எஸ்.அஜித்குமார் (23) என்பதும், போலீசில் பணிக்கு சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் அது முடியாமல் போகவே, போலீஸ் உடை அணிந்து நடித்து பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Tags : #ACCIDENT #TAMILNADUPOLICE #TIRUPPUR