இனிமே மெட்ரோ 'ட்ரெயின்ல'... இந்த பொருட்களை எல்லாம் 'எடுத்து' போகக்கூடாது... மீறி எடுத்துப்போனா 'தடுத்து' நிறுத்திடுவாங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 25, 2020 01:33 PM

கூட்ட நெரிசல் இல்லை, குறைந்த தூர பயணம் என்பதால் கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும், சென்னையில் மக்கள் அதிகளவு மெட்ரோ ட்ரெயினை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிலையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Fish and Meat products banned in Metro Trains, Details

அதன்படி சென்னை மெட்ரோ ட்ரெயினில் இனி பயணிகள் மீன், இறைச்சி எடுத்து செல்லக்கூடாது என அறிவிப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மெட்ரோ நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ட்ரெயினில் இறைச்சி, மீன், இறந்த பறவைகள், விலங்குகள் போன்றவற்றை கொண்டு செல்ல தடை உள்ளது. 2014 மெட்ரோ ட்ரெயின் விதியின்படி இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய வளாகம் மற்றும் ரெயிலில் இந்த தடை உள்ளது. இறைச்சி மற்றும் அழுகும் பொருட்களை மெட்ரோ ட்ரெயினில் கொண்டு போக முடியாது.

பயணிகள் வசதியாக செல்வதற்காகவே மெட்ரோ ட்ரெயின் சேவை உள்ளது. எனவே, பெரிய சாக்கு மூட்டைகளில் வியாபார பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதி இல்லை. இறைச்சி, மீன் போன்றவற்றை கொண்டு சென்றால் ‘ஸ்கேன்’ எந்திரத்தில் தெரிந்து விடும். அதனால் பயணத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

என தெரிவித்து இருக்கிறார்.

இதனால் சிந்தாதிரிப்பேட்டை, கோயம்பேடு ஆகிய மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் அவற்றை மெட்ரோ ட்ரெயினில் எடுத்துச்செல்ல முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. 

Tags : #METRO #TRAIN