அடுத்த 4 நாளைக்கு 'இந்த' ரூட்ல... முக்கியமான ட்ரெயின்லாம் 'ரத்து' பண்ணிருக்காங்க...முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 27, 2020 05:09 PM

பராமரிப்பு பணிகளை முன்னிட்டு சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் ட்ரெயின்களில், ஒருசில ட்ரெயின்களை ரத்து செய்திருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதேபோல திருவள்ளூர், வேளச்சேரி, அரக்கோணம் வழியாக செல்லும் ட்ரெயின்கள் குறிப்பிட்ட சில ஸ்டேஷன்களில் நின்று செல்லாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்த முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

Electric Train Services Cancelled due to Maintenance work

1. இரவு 12.15 மணிக்கு சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ட்ரெயின் பிப்ரவரி 28, 29 மற்றும் மார்ச் 1,2 ஆகிய தேதிகளில் இயங்காது. அதே தேதிகளில் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர் மார்க்கெட் வரை நள்ளிரவில் வந்து செல்லும் ட்ரெயினும் இயங்காது.

2. திருவள்ளூரில் இருந்து சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ட்ரெயின் புட்லூர், திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லாது.

3. அதேபோல அரக்கோணத்தில் இருந்து சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் ட்ரெயின் புட்லூர், திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லாது.

4. அரக்கோணத்தில் இருந்து சென்னை வேளச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ட்ரெயின் மற்றும் 4.55 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மூர் மார்க்கெட்டுக்கு செல்லும் ட்ரெயின்களும் புட்லூர், திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லாது.

Tags : #TRAIN