‘இடத்தை மாத்திய ஆசியக் கோப்பை போட்டி’... ‘இந்தியா - பாகிஸ்தான் விளையாடுமா?’... 'பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிரடி பதில்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 28, 2020 11:55 PM

ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிரடியாக பதிலளித்துள்ளார்.

BCCI Sourav Ganguly Confirms Asia Cup 2020 in Dubai

வரும் செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக, அண்டை நாடான பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என பிசிசிஐ கூறி வந்தது. இந்நிலையில், தற்போது ஆசியக் கோப்பை போட்டி துபாய் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இருநாட்டிற்கும் பொதுவான இடத்தில் போட்டி நடைபெற உள்ளதால், இந்தியா - பாகிஸ்தான்  அணிகள் விளையாடுவதில், இந்தியாவிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 2012-2013-ம் ஆண்டிற்குப்பிறகு அண்டை நாடுகளான பாகிஸ்தான் - இந்திய அணிகள் இருதரப்பு தொடரில் பங்கேற்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #BCCI #SOURAVGANGULY #CRICKET #PAKISTAN #ASIA CUP 2020 #INDIA #DUBAI