அந்த வெட்டுக்கிளியா? இந்த வாத்துப்படையா?... யாரு 'கெத்துன்னு' மோதி பாத்துடலாம்... 'பாகிஸ்தானுக்காக' சீனா செய்த தந்திரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் விவசாயிகளின் அடிமடியில் வெட்டுக்கிளிகள் கைவைத்து விட்டன. லட்சக்கணக்கான ஏக்கர்களில் உள்ள பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்வதால் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்காக சீன அரசு சுமார் 1 லட்சம் வாத்துக்குஞ்சுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க இருக்கிறது. ஒரு வாத்து சுமார் 200 வெட்டுக்கிளிகள் வரை உண்ணும் என்பதால் விசேஷமாக வளர்த்து வரும் வாத்து ஆர்மியை அனுப்பி வைத்து பாகிஸ்தானின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சீனா முடிவெடுத்துள்ளது.
இந்த வாத்து ஆர்மி சீனாவில் இருந்து புறப்பட தயார் நிலையில் இருப்பதாக சீன நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மோசமாக பாதிக்கப்பட்ட சிந்து, பலூசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணங்களுக்கு சீன விவசாய மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகத்தின் நிபுணர் குழுவை சீனா ஏற்கனவே அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.