'சாலையில் கிடந்த... சடலத்தின் மீது... 12 மணி நேரம் வாகனங்கள் போக்குவரத்து!'... எலும்புத் துண்டுகளாக மீட்கப்பட்ட... நெஞ்சை உலுக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 25, 2020 05:59 PM

12 மணி நேரமாக சாலையில் கிடந்த சடலத்தின் மீது வாகனங்கள் ஓடியதால், இறந்தவரின் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vehicles ran over a corpse for over 12 hours near Delhi

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா அருகே டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஒரு அடையாளம் தெரியாத நபர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. அதில் பலியான அந்த நபரின் சடலம் நெடுஞ்சாலையிலேயே கிடந்துள்ளது. கேட்பாரற்றுக் கிடந்த சடலத்தின் மீது, சுமார் 12 மணி நேரத்திற்கு வாகனங்கள் ஏறிச் சென்றுள்ளன.

இதனால், உடல் சிதைந்த நிலையில் உயிரிழந்த நபரின் எலும்புகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆடை மற்றும் உடற்கூறு ஆய்வின் அடிப்படையில் மட்டுமே, இறந்தவரின் பாலினம் ஆண் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தற்போது வரை இறந்தவர் பற்றிய எந்த தகவலும் அறியாத நிலையில், அவருடைய டிஎன்ஏ மாதிரிகளை போலீஸார் பத்திரப்படுத்தியுள்ளனர்.

Tags : #ACCIDENT #DELHI #CORPSE #LUCKNOW