VIDEO: உங்க 'ஈகோவுக்காக'... கடைசில 'இப்டி' பண்ணிட்டீங்களே... கேப்டனை 'விளாசும்' ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்ட் சர்ச்சில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கனே வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். அகர்வால் 7 ரன்களில் அவுட் ஆக, மறுபுறம் நிலைத்து நின்ற பிரித்வி ஷா 54 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி (3) ரன்களிலும், ரஹானே 7 ரன்களிலும் வெளியேறினார்.

— faceplatter49 (@faceplatter49) February 29, 2020
எனினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஹாரி(55), புஜாரா(54) ரன்கள் எடுத்து இந்திய அணியின் கவுரமான ஸ்கோருக்கு உதவினர். அடுத்து வந்த பண்ட்(12), ஜடேஜா(9), உமேஷ் யாதவ்(0), ஷமி(16) என யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 242 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெல்லுமா? என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
— faceplatter49 (@faceplatter49) February 29, 2020
இன்றைய போட்டியில் கோலி எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். கள நடுவர் அவுட் கொடுத்த பின்னும், புஜாராவுடன் கலந்து ஆலோசித்த கோலி ரிவியூ கேட்டார். தொடர்ந்து ரீ-பிளேயில் பந்து ஸ்டம்புகளைத் தாக்குவது தெளிவாக தெரிந்தது. இதையடுத்தே அவர் களத்தை விட்டு வெளியேறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரின் ஈகோவுக்காக ஒரு ரிவியூவை தேவையில்லாமல் வீணடித்து விட்டார் என சாடி வருகின்றனர். தேவையில்லாமல் ரிவியூவை வீணடிப்பதை கோலி இன்னும் கைவிடவில்லையா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கேப்டனாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தினை கோலி வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Ego review from Kohli there. #NZvIND
— Sam[uel] Smith (@sgowsmith1988) February 29, 2020
