"குதிரை மேல சவாரி செஞ்சு பாத்திருப்பீங்க..." "குதிரையே சவாரி செஞ்சு பாத்திருக்கீங்களா?..." இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில், வீட்டிலிருந்து தப்பிய குதிரை ஒன்று அந்நகரத்தின் பேருந்தில் ஏறி பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில், தலைநகரான கார்டிப் நகர பகுதியில், குதிரை ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிவதாக, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விலங்குகளை மீட்டுச் செல்லும் வாகனத்துடன் விரைந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் இருந்த சிலர் குதிரையை சிட்டி பஸ் ஒன்றில் ஏற்றி விட்டனர். குதிரையை மீட்க, போலீசார் எப்படியும் வாகனத்துடன் வருவார்கள் என்ற எண்ணத்தில் ஓட்டுனரும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார்.
பேருந்தில் இருந்த பயணிகள் குதிரையுடன் செல்பி மற்றும் வீடியோக்கள் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இதையடுத்து போலீசார் குதிரையை தேடிப்பிடித்து மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. "குதிரை வீறு நடைபோட்டு பேருந்தில் ஏறியது... குதிரை மீது சவாரி செய்வதை பார்த்தது உண்டு, ஆனால் குதிரை பஸ்சில் பயணம் செய்வதை இப்போதுதான் பார்க்கிறேன்..." என பலரும் நகைச்சுவையாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
