அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து..! 25 பேர் படுகாயம், 2 பேர் சம்பவ இடத்திலே பலி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 08, 2020 04:11 PM

சித்தூர் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Andhra Pradesh bus accident in Chittoor, 2 people killed

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து குப்பத்துக்கு அரசு சொகுசுப் பேருந்து இன்று அதிகாலை சென்றுள்ளது. அதேபோல் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் இருந்து திருப்பதி நோக்கி தனியார் பேருந்து வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக இரு பேருந்துகளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அரசு பேருந்து டிரைவர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 25-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காயமடைந்த சிலரை லாரியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Tags : #ACCIDENT #TELANGANA #KILLED #ANDHRAPRADESH #CHITTOOR #PASSENGERS #BUS