darbar USA others

‘திடீரென’ மோதித் தள்ளிய ‘பேருந்து’... அடுத்த ‘நொடி’ சாலையில் ‘கவிழ்ந்து’ உருண்ட பயங்கரம்... கோர விபத்தில் ‘16 பேர்’ பலி; ‘42 பேர்’ படுகாயம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 08, 2020 09:08 AM

பெரு நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Accident 16 Killed In Peru After Bus Crashes Into Parked Cars

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவிற்கு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அந்தப் பேருந்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர்.

அரேகிப்பா நகரில் உள்ள ஒரு சாலையில் அந்தப் பேருந்து 100 கி.மீ. வேகத்தில் போய்க்கொண்டிருந்தபோது, தீடீரென ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறிய பேருந்து அடுத்த நொடி சாலையில் கவிழ்ந்து உருண்டுள்ளது.

இந்த கோர விபத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : #ACCIDENT #PERU #TOURIST #BUS #CARS