'கர்ப்பமா' இல்லன்னு தெரிஞ்சா தான்... 'போர்டிங்' பாஸ் தருவோம்... விமானத்தில் 'பெண்ணுக்கு' நடந்த கட்டாய சோதனை!
முகப்பு > செய்திகள் > உலகம்விமான நிலையத்தில் பெண்ணுக்கு கட்டாய கர்ப்ப பரிசோதனை செய்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மிடோரி நிஷிடா(25) என்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் சில நாள்களுக்கு முன்பு ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள சைபனுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது ஹாங்காங் விமான நிலையத்தினர் அவரை கர்ப்ப பரிசோதனை செய்யும்படி கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.
தான் கர்ப்பமாக இல்லை என்று எவ்வளவோ அவர் எடுத்துக்கூறியும், விமான நிலையத்தினர் அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதியில் அவர் கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டு தான் கர்ப்பமாக இல்லை என்று நிரூபித்த பின்னர் தான், அவரை விமானம் ஏற அனுமதித்து இருக்கின்றனர்.
இந்த நிகழ்வை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட, பதிலுக்கு வருத்தம் தெரிவித்த ஹாங்காங் விமான நிறுவனம் அமெரிக்காவின் குடியுரிமை சட்டங்களை கடைபிடிக்கவே தாங்கள் இவ்வாறு தெரிவித்ததாக கூறியுள்ளது.
அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் அங்கு குடியுரிமை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் பிற நாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் அமெரிக்காவில் வந்து குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்று அமெரிக்க அரசாங்கம் இதுபோன்ற விதிமுறைகளை வலுவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
