VIDEO: ‘ஒரு கையில் செல்போன்’.. ‘மறுகையில் ஸ்டியரிங்’.. பயணிகள் உயிருடன் விளையாடிய டிரைவர்.. பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழனியில் தனியார் பேருந்து ஓட்டுநர் செல்போன் பார்த்தபடியே பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து செந்துறைக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்தை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது தனது செல்போனை பார்த்தபடியே பேருந்தை இயக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டுநர் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளனர்.
ஆனால் அவற்றை கண்டு கொள்ளாமல் ராமகிருஷ்ணன் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. சுமார் 20 நிமிடம் செல்போனை பார்த்தபடியே அவர் பேருந்தை இயக்கியுள்ளார். இதனை பேருந்துக்குள் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செல்போனை பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
