‘திடீர்’ பள்ளத்தில் ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘நொடிகளில்’ கேட்ட ‘வெடிச்சத்தம்’... ‘பதறவைக்கும்’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் கிங்காய் மாகாணத்தின் தலைநகரான ஜைனிங்கில் (Xining) நேற்று முன்தினம் திடீரென சாலையில் ஏற்பட்ட பல அடி ஆழ பள்ளத்திற்குள் அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்துள்ளது. இதில் பேருந்திற்குள் இருந்த பயணிகளுடன் சாலையோரம் இருந்த சிலரும் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்துள்ளனர். இதையடுத்து பேருந்து விழுந்த சில நொடிகளிலேயே பள்ளத்திற்குள் இருந்து தீப்பிழம்புடன் வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்த 16 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல ஏற்கெனவே அங்கு 2 விபத்துகள் நடந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
