2 ‘சுற்றுலா’ பேருந்துகள் லாரி மீது மோதி ‘கோர’ விபத்து... ‘நொடிகளில்’ நடந்து முடிந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 30, 2019 10:48 AM

எகிப்தில் சுற்றுலா பயணிகள் சென்ற 2 பேருந்துகள் லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

3 Indian Among 6 Killed 13 Injured In Egypt Bus Lorry Accident

எகிப்தின் சூயஸ் ஆளுகையில் (Suez Governorate) சனிக்கிழமை சுற்றுலாப்  பயணிகளை ஏற்றிச் சென்ற 2 பேருந்துகள் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 13 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 2 மலேசியர்களும், 3 எகிப்தியர்களும் உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #ACCIDENT #EGYPT #TOURIST #BUS #LORRY