"ஸ்டியரிங் இல்லாம ஒரு காரா?"... "அதுவும் மின்னல் வேகத்துல போகுமா?"... "அவதார் பட இயக்குநரின் புதிய அவதாரம்!"...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manishankar | Jan 10, 2020 06:53 PM

ஸ்டியரிங் இல்லாமல், ஓட்டுநர் இல்லாமல் மின்னல் வேகத்தில் செல்லும் கார் ஒன்றை பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Mercedes Benz and James Cameron jointly design an AI car

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம், அவதார். அந்த திரைப்படத்தில் வித்தியாசமான கார் ஒன்று இடம்பெற்றிருக்கும். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூடன் இணைந்து பென்ஸ் நிறுவனம், அத்தகைய ஒரு மின்சார காரை தற்போது தயாரித்துள்ளது.

VISION AVTR எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தானியங்கி மின்சார காரில் ஸ்டியரிங் இல்லை. மேலும், காரினுள் இருப்பவர்கள் வெளியே உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள வசதியாக, 33 அசையும் செதில்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரிலுள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ தூரம் வரை மின்னல் வேகத்தில் செல்லலாம்.

இந்த கார் இன்னும் விற்பனைக்கு வராத நிலையில், மின்னனு தொழில் நுட்பக் கண்காட்சியில் மட்டும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tags : #CAR #AI #BENZ #AVATAR