‘வழிவிடாமல்’ முன்னே சென்ற கார்... ‘ஆத்திரத்தில்’ ஓட்டுநர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jan 07, 2020 08:53 AM
இங்கிலாந்தில் தனக்கு வழிவிட மறுத்த காரை இடித்துத் தள்ளிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனின் கிழக்குப் பகுதியிலுள்ள சிங்போர்ட் என்ற இடத்திலுள்ள சாலையில் வாகனங்கள் விரைவாக போய்க்கொண்டிருந்த நிலையில், ஒரு கார் மட்டும் சுமாரான வேகத்தில் சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது அந்தக் கார் பின்னால் வந்த பள்ளி வாகனத்திற்கு வழிவிட மறுத்ததாகக் கூறப்படுகிறது.
அதைப் பார்த்த பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் பலமுறை ஹார்ன் அடித்தும், கார் ஓட்டுநர் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பள்ளி வாகன ஓட்டுநர் அந்தக் காரை இடித்துத் தள்ளிவிட்டு முன்னே சென்றுள்ளார். இதில் கார் சேதமடைந்த போதும், காருக்குள் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பள்ளி வாகன ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.