அசுரவேகத்தில் வந்த கார்... நொடியில் நடந்த விபத்தில் மாட்டி துடித்த நபர்... கொஞ்சமும் யோசிக்காமல் செய்த உதவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 27, 2019 01:20 PM

திருச்சி அருகே விபத்தில் சிக்கி தவித்த ஒருவரை, காவலர் ஒருவரே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்து, உதவி செய்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

man heavily injured in trichy omni and car accident

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த புளியவலசு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (54). இவருக்கு சாந்தி (50) என்ற மனைவியும், பிரியதர்ஷினி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பம் சகிதமாக, பொள்ளாச்சி அருகிலுள்ள மாசாணியம்மன் கோயிலுக்கு ஆம்னி வேனில் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம், மூலனூரை அடுத்த புளியம்பட்டி பிரிவு அருகே வந்தபோது, இவர்களுடைய மாருதி ஆம்னி மீது அதிவேகத்தில் எதிரே வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி, நசுங்கி பலத்த சேதமடைந்தது. இதில், தியாகராஜனின் கால், உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாமல் கதறித் துடித்தார். இதையடுத்து, அங்கிருந்த மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் எனக் கூறப்பட்டதால், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது கணேஷ் என்ற தனிப்பிரிவு காவலருக்கு இந்த தகவல் கிடைத்ததும், விசாரித்துப் பார்த்ததில், மூலனூரில் உள்ள அதிபர் ஒருவர், டிரைவர்களை கொண்டு தனியார் ஆம்புலன்ஸ்களை இயக்கி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, காவலர் கணேஷ், அவரிடம் போய் கேட்டுள்ளார். ஆனால் அவர்,  ‘ஆம்புலன்ஸ் இருக்கு, டிரைவர் இல்லைன்னு’ கூறியுள்ளார். இதையடுத்து சற்றும் யோசிக்காமல், ‘சரி சாவியைக் கொடுங்க, நானே ஆம்புலன்ஸ் எடுத்து செல்கிறேன்’ என சாவியை பெற்றுக்கொண்டு, விபத்து நடந்த இடத்துக்கு வந்த காவலர் கணேஷ், அங்கு வலியால் துடித்துக் கொண்டிருந்த தியாகராஜனை மீட்டு, 24 கி.மீ. தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளார்.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான ஆம்னியை வைத்து, பிழைப்பு நடத்தி வந்த அந்தக் குடும்பம், இனிமேல் என்ன சிரமப்படப் போகிறார்கள் என்று தெரியவில்லை என ஆதங்கப்பட்டுள்ள காவலர் கணேஷ், ஆம்புலன்சில் இறக்கிவிட்டபோது கூட தான் போலீஸ் என்று கூறாமலே உதவி செய்துவிட்டு சென்றுள்ள சம்பவத்திற்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

மேலும் படிக்க: வாக்களிக்க சென்ற தந்தை, மகன்... பைக் மீது, தனியார் பேருந்து மோதி... நிகழ்ந்த கோர சம்பவம்!

Tags : #ACCIDENT #MAN #OMNI #VAN #CAR