நேருக்கு ‘நேர்’ மோதிக்கொண்ட லாரி - கார்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 29, 2019 03:31 PM

திருச்சியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Trichy Musiri 2 Died 8 Injured In Car Lorry Accident

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன். கோவில்களில் அலங்கார வேலைகள் செய்துவந்த இவர் சென்னையில் ஒரு வேலையை முடித்துவிட்டு தனது குழுவினருடன் கோவைக்கு காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். அவர்களுடைய கார் முசிறி அருகே உள்ள செவலிங்கபுரம் பகுதியில் போய்க்கொண்டிருந்தபோது லாரி ஒன்றின்மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டிய அழகப்பன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர் உட்பட 8 பேர் இதில் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அழகப்பன் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

Tags : #ACCIDENT #TRICHY #MUSIRI #CAR #LORRY