“மகளின் திருமண வரவேற்பில்”.. “மாட்டுச் சாண கோட்டிங் செய்யப்பட்ட கார்”... தந்தை விநோதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 09, 2020 11:49 AM

டாக்டர் ஒருவர் தன் மகளின் திருமண காரை சாணத்தை கொண்டு கோட்டிங் செய்துள்ள விஷயம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Doctor gift a car with cow dung on his daughter marriage

இன்றைய சூழலில் ஒருவரின் அந்தஸ்தைக் காட்டும் விஷயமாக திருமணங்கள் இருக்கும் நிலையில், பலரும் ஆடம்பரத்தை முதன்மைப் படுத்தும் நிலையில், மகளின் திருமணத்துக்கு பரிசாகக் கொடுத்துள்ள காருக்கு சாணத்தைக் கொண்டு கோட்டிங் செய்துள்ளார் மருத்துவர் ஒருவர்.

மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் நவ்நாத் டுதால். இவர் ஒரு டாக்டர் என்பதால், கேன்சர் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ள மாட்டுச் சாணத்தை பற்றியும், பெருகி வரும் வெப்பமயமான சுற்றுச் சூழலை சமநிலைக்குக் கொண்டுவருவதில் பசுக்களின் முக்கியத்துவம் பற்றியுமான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என, தன் மகளின் திருமணத்துக்கு பரிசாகக் கொடுத்த காருக்கு மாட்டுச் சாணத்தைக் கொண்டு கோட்டிங் செய்துள்ளார்.

Tags : #DOCTOR #DAUGHTER #CAR