மகனுடன் சேர்ந்து தந்தை வெளியிட்ட ‘வைரல்’ வீடியோ... வீட்டுக்கு வெளியே காத்திருந்த வேறலெவல் ‘சர்ப்ரைஸ்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 28, 2019 12:10 AM

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து உருவாக்கிய ஒரு வீடியோவால் அவர்களுக்கு லம்போர்கினி கார் 2 வாரத்திற்கு பரிசாக கிடைத்துள்ளது.

Video Best Christmas Gift Lamborghini Surprised US Father Son

அமெரிக்காவைச் சேர்ந்த பாக்கஸ் மற்றும் அவருடைய மகன் ஜேண்டர் இருவரும் பிரபல சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினியின் தீவிர ரசிகர்கள். லம்போர்கினி கார் மீதான ஈர்ப்பால் இருவரும் 3டி உருவத்தில் லம்போர்கினி காரை செய்து வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலாகியுள்ளது. அதைப் பார்த்த லம்போர்கினி நிறுவனம் அந்தத் தந்தைக்கும், மகனுக்கும் ஒரு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ் அளிக்க முடிவு செய்துள்ளது.

இதையடுத்து கிறிஸ்துமஸ் அன்று பாக்கஸ் வீட்டு வாசலில் லம்போர்கினி கார் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரான லம்போர்கினியை பரிசாக 2 வாரத்திற்கு சொந்தமாக வைத்துக்கொள்வதற்காக அந்நிறுவனம் அவர்களுக்கு அளித்துள்ளது. இந்த சர்ப்ரைஸால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற தந்தையும் மகனும், “இதுவரையில் அந்த வீடியோவுக்காக அட்டையில் 3டி லம்போர்கினியை உருவாக்க சுமார் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

Tags : #LAMBORGHINI #US #FATHER #SON #CHRISTMAS #GIFT #CAR #VIRAL #VIDEO