'வயசானாலும் அவங்க 'LOVERS' தான்'... 'ஐயோ யாரு கண்ணு பட்டுச்சு'... நெஞ்சை உருக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 10, 2020 06:28 PM

இளமை காலத்தை காட்டிலும் வயது முதிர்ந்த காலத்தில் தான், கணவன், மனைவி துணை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்க்கையின் இறுதி வரை வரும் உறவு என்றால் இந்த இரண்டு உறவுகள் மட்டுமே. ஆனால் தனது கண் முன்பே மனைவியை பறிகொடுக்கும் கொடுமை என்பது எந்த கணவருக்கும் நடக்க கூடாத கொடுமை.

Sad husband dies after wife Unexpected death will break the heart

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஓவரூர் கிராம் சோதிரியம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவருடைய மனைவி இந்திரா. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாத நிலையில், மனைவிக்கு எந்த சோகமும் தெரியாமல் நாகராஜ் பார்த்து கொண்டார். உறவினர் வீடு நல்லது கேட்டது விசேஷங்களுக்கு எங்கும் சென்றாலும் ஜோடியாக இணைபிரியாமல் சென்று வருவது இருவரது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி இந்திராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன நாகராஜ், உறவினர்கள் சிலரின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக இந்திரா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இந்திரா சிகிச்சை பலனின்றி கணவர் நாகராஜ் முன்னிலையில் இறந்தார். தன்னுடன் இன்ப, துன்பங்களில் இதனை வருடம் பயணித்த மனைவின் மரணம் நாகராஜை நிலைகுலைய செய்தது.

மனைவி இந்திராவை நினைத்து மருத்துவமனையிலேயே கதறி அழுதார். உறவினர்கள் அவரை தேற்ற முயற்சித்த போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவரை சோதித்த போது அவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இது அங்கிருந்த அவரது உறவினர்களை அதிரச்செய்தது.

வயதான நிலையம் கணவனும், மனைவியும் அவ்வளவு அன்னியோன்னியமாக இருந்தார்கள். எந்த நிலையிலும் தங்களுக்கு குழந்தைகள் இல்லை என இருவரும் எண்ணியது இல்லை. அப்படி இருந்த தம்பதியர்கள் மேல் யாருடைய கண்ணு பட்டதோ தெரியவில்லை, என அவர்களுடைய உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள். தன் கண் முன்னால் மனைவி இறந்த துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் கணவனும் இறந்த சம்பவம், ஓவரூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #HUSBAND AND WIFE #THIRUVARUR #UNEXPECTED DEATH #LOVE