'பபுள்கம்' மோசடி.. என்ன 'தலை' ஒரு பக்கம் 'வீங்கி' இருக்கு... கையும் 'களவுமாக' பிடித்த போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 09, 2019 12:29 AM

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 2,762 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.

young man used bubble gum for height purpose in salem

தேர்வின்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தயாநிதி என்ற இளைஞரின் தலை ஒரு பக்கம் வீங்கி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் பாரதி மோகன் இளைஞரின் தலையை சோதனை செய்து பார்த்தார். அதில் தயாநிதி உயரத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக தலையில் பபுள்கம் ஒட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தகுதித்தேர்வில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றினர்.

 

Tags : #SALEM #POLICE