'ப்ளீஸ் சொல்றத கேளுங்க.. வேண்டாம்'.. வழக்கறிஞர்களிடம் கெஞ்சி.. தடுக்க முயலும் பெண் காவல்துறை துணை ஆணையர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 08, 2019 11:51 AM

ஒரு பெண் நினைத்தால் ஒரு போரையே நிறுத்தவும் முடியும், ஒரு பூகம்பத்தை உண்டாக்கவும் முடியும் என்று சொல்வார்கள். அப்படித்தான் வன்முறையைத் தவிர்க்கச் சொல்லி பெண் காவலர் செய்துள்ள காரியம் நெஞ்சை உருக வைத்துள்ளது.

woman DCP pleading before the lawyers to stop violence video

டெல்லியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த வன்முறையால் ஆங்காங்கே பற்றி எரியும் அளவுக்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்த வன்முறையை சமாளிக்கச் சென்ற போலீஸாருடன் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தைக்கே தயாராக இல்லை என்று தெரிந்தது.

இந்நிலையில்தான், ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்கள் கூட்டமாக ஓடிவரும்போது டெல்லி வடக்கு துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் தன்னுடைய போலீஸார் குழுவுடன் முன்னோக்கி ஓடிவந்து வழக்கறிஞர் கூட்டத்தினரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கலாம், வன்முறை வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

 

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இணையத்தில் காணும் பலரையும் உருக வைத்துள்ளது.

 

Tags : #POLICE #DELHI #PROTEST #LAWYERS