‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Nov 03, 2019 01:46 PM
குடும்பத்தினருடன் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ராகூட் மாவட்டத்தில் உள்ள மவூ என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினர் ஒருவருடன் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது. பின்னர் உடன் வந்த நபரை மரத்தில் கட்டிவைத்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் உச்சகட்ட கொடுமையாக அவர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 பேர் கொண்ட அந்த கும்பல் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
