'இருட்டு வீடு... மாத்திரை கேட்டு அடம் பிடிப்பார்.. தர்லன்னா அடிச்சிடுவார்'.. 30 வருட கொடுமை.. மகனுக்கும் தந்தைக்கும் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 07, 2019 06:58 PM

சென்னை சாஸ்திரி பவனில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த விஸ்வநாதன் (82). இவரது மனைவி மீனாட்சி. இவர்களின் ஒரே மகன் வெங்கட்ராமனுக்கு (44) 30 வருடங்களுக்கு முன்பாக சில மனமாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து வீட்டு பொருட்களை உடைத்துள்ளார். அவரை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. அவருக்கு  Schizophrenia என்கிற நோய் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் மாத்திரை மருந்துகளை பரிந்துரைத்தனர்.

chennai retired govt officer commits suicide after his son dead

ஆனால் நல்ல வேலை, சம்பளம் என்றிருந்தும் விஸ்வநாதனின் மகனுக்கு நோய் சரியாகவில்லை. மாறாக எப்போது எப்படி வேண்டுமானாலும் மாறும் வெங்கட்ராமனை, தனது சொந்த வீட்டில் வைத்து முழுநேரமாக கவனித்துக்கொள்ள தொடங்கினார் அவரது தந்தை விஸ்வநாதன். எப்போதும் இருளடைந்த அந்த வீட்டில் இருந்து வெளியில் கேட்கும் சத்தம் அந்த குடியிருப்பு பகுதிக்கே பழகியிருந்தது. இந்த நிலையில்தான் விஸ்வநாதனின் வீட்டில் தீபாவாளி முடிந்த 2 நாட்களில் துர்நாற்றம் வீசியது. சோதனை செய்தபோது விஸ்வநாதன் மயக்க நிலையிலும், வெங்கட்ராமன் இறந்தும் கிடந்தார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி விஸ்வநாதன் உயிரிழந்தார்.

முதலில் விஸ்வநாதன் தான் தன் மகன் வெங்கட்ராமனை கொன்றிருக்க வேண்டும் என்று யூகிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் வெங்கட்ராமன் அடிக்கடி மாத்திரைகளை கேட்டு அடம் பிடிப்பார் என்றும் விஸ்வநாதன் தரவில்லை என்றால் தந்தை என்றும் பாராமல் அவரை வெங்கட்ராமன் அடித்துவிடுவார் என்றும் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகுதான், வெங்கட்ராமன்  அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் இறந்ததும், மகன் இறந்த சோகத்தில் அதே மாத்திரைகளை உட்கொண்டு தந்தை தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்திய தண்டனைச் சட்டம் 174 என்ற பிரிவின் கீழ் இவ்வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

ரொம்ப நல்லவரான விஸ்வநாதன் சம்பாதித்த பணத்தை அனைத்தும் மகனுக்கே செலவிட்டவர் என்றும் எல்லோரிடமும் கனிவாக பேசுபவர் என்றும் அவரின் நிலைமை யாருக்குமே வரக்கூடாது என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : #CHENNAI #FATHER #SON #DISEAS #POLICE