‘3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை’.. சிக்கிய உருக்கமான கடிதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 26, 2019 10:42 AM

கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young couple commits suicide for loan in Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே உள்ள செல்லாண்டி நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமரன். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த செரினா என்பவருக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 5 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த செரினா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் இவர்களின் வீடு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது குமரன் மற்றும் செரினா இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவர்களது வீட்டில் ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், ‘நான் குமரன் என் வீட்டில் உள்ள பொருள், வண்டி, டிவியை விற்று என் கடனை கட்டவும்’ என எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDE #KRISHNAGIRI #LOAN #HUSBANAD #PREGNANTWIFE #HUSBAND