'யாரு சாமி இந்த பொண்ணு'...'பஸ்ஸுன்னா நாங்க பயந்துருவோமா?'...மாஸ் காட்டிய பெண்...தெறிக்கவிடும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 26, 2019 10:19 AM

தவறான பாதையில் வந்த பேருந்திற்கு இடம் கொடுக்காமல், அப்படியே ஒரே இடத்தில் நின்ற பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kerala Girl not giving way for KSRTC since it comes in wrong way

கேரள மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று தவறான பாதையில் மற்ற வாகனங்களை முந்தி வந்து கொண்டிருந்தது. அப்போது குறுகலான சாலை ஒன்றில் அந்த பேருந்து முந்தி செல்ல முற்பட்டபோது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் ஒருவர் பேருந்தின் முன்பு வந்து நின்றார். இதனால் அந்த பேருந்தால் முந்தி செல்ல முடியவில்லை.

இதனிடையே அந்த பெண் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று விடுவார் என அந்த பேருந்தின் ஓட்டுநர் எண்ணிய நிலையில், அந்த பெண் ஆசையாமல் நின்ற இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தார். அதன் பின்பு அந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை திருப்பி சரியான பாதையில் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Tags : #KERALA #TWITTER #KSRTC #VIRAL VIDEO #KERALA GIRL #BRAVE KERALA GIRL