‘இப்டியா பண்ணுவ நீ’... ‘கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு’... 'கலங்கி துடிக்கும் உறவினர்கள்'!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 19, 2019 12:18 PM

வேலூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young woman committed suicide in ranipet due to family issue

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனியைச் சேர்ந்தவர் செல்வம், கட்டடத் தொழிலாளியாகக் கூலி வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி 19 வயதான தனலட்சுமி. இவர்களுக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடைப்பெற்றது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், தனலட்சுமி தற்போது 4  மாதம் கர்ப்பமாக இருந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று இரவும் இருவருக்கிடைமிடையில் தகராறு வந்ததாகத் தெரிகிறது.  கணவர் திட்டியதால் தனலட்சுமி விடிய விடிய அழுததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை கணவர் கட்டிட வேலைக்கு சென்றுவிட, நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது, மின்விசிறியில், தனலட்சுமி தூங்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அருகில் குழந்தை பவித்ரா அழுதுகொண்டு நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதற்கிடையில், தூக்கில் தொங்கிய தனலட்சுமியின் சடலத்தை உறவினர்கள் கீழே இறக்கி கதறினர். `வாயும் வயிறுமா இருந்த பொண்ணு இப்படிப் பண்ணிடுச்சே. கைக்குழந்தையை விட்டுட்டு, எங்களையெல்லாம் தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே’ என்று கூறி அழுது புலம்பினர். சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து உயிரிழந்த தனலட்சுமியின் கணவன் செல்வத்திடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : #RANIPET #SUICIDE