‘தாய்க்கும் 3 மாத பெண் குழந்தைக்கும் நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’.. ‘கணவர் செய்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 19, 2019 05:04 PM

தாயுடன் 3 மாத பெண் குழந்தை எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman infant baby burnt alive over dowry by husband in-laws in UP

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த முகமது காசிம் என்பவர் ஷப்னம் என்ற பெண்ணை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு 3 மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. திருமணம் செய்து கொண்டு வந்தது முதலே கணவர் மற்றும் அவரது தாயால் வரதட்சணை கேட்டு ஷப்னம் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முகமது காசிம், அவரது தாயுடன் சேர்ந்து ஷப்னம் மற்றும் அவருடைய 3 மாத குழந்தையையும் வீட்டுக்குள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் எரிக்கப்பட்ட உடல்களை மீட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது கொலை மற்றும் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : #UP #MOTHER #INFANT #BABY #BURNTALIVE #HUSBAND #INLAWS #DOWRY