‘காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு’.. மலை உச்சியில் இருந்து குதித்த இளம் காதல் ஜோடி..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 18, 2019 08:49 AM

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல்ஜோடி மலையில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Young lovers suicide attempt in Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நீலாம்பரி என்பவரும் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி போளுர் சப்தகிரி மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக பாறைகளின் சிக்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்து அங்கிருந்த பொது மக்கள் காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். புதிய தலைமுறை பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #LOVERS #SUICIDE #VIRALVIDEO #TIRUVANNAMALAI