‘எல்லாமே சந்தோஷமாத்தான் போச்சு’... ‘கணவரிடமிருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்’... 'அதிர்ந்துப்போன மனைவி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Sep 19, 2019 03:26 PM
துபாயில் இருந்து வாட்ஸ் அப்பின் வாய்ஸ் மெசேஜ் மூலம், கணவரின் நடவடிக்கையால், மனைவி மற்றும் மகள் தவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிவமோக்காவைச் சேர்ந்தவர் ஆயிஷா சித்திக்கி. இவரது கணவரான முஸ்தபா துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வரும், ஆயிஷா சித்திக்கி, தற்போது கணவரின் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். துபாயில் உள்ள தனது கணவர், தற்போது வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் வாயிலாக, மனைவி ஆயிஷாவிற்கு முத்தலாக் கூறியுள்ளார். இதனால் நிலைக்குலைந்துப் போன அவர், தற்போது, காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது கணவர் தலாக் கூறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இந்த விவாகரத்தை ஏற்கவில்லை. போலீசில் வழக்குப் பதிவு செய்துள்ளேன். எனக்கு நீதி வேண்டும். கடந்த 21 ஆண்டுகளாக எந்தச் சிக்கலும் இல்லாமல் சந்ஷோசமாகவே வாழ்ந்தோம். ஆரம்பத்தில் எங்களுக்குக் குழந்தை இல்லாத பிரச்சினையைக் கூட, அவர் பெரிதாக்கவில்லை. ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தோம். அவளுக்கு தற்போது 16 வயது ஆகிறது. இப்போது திடீரென தலாக் கூறுகிறார். நான் நிறைய படிக்கவில்லை.
என் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல முடியாது. என் கணவரும் எங்களுக்கு எந்தவித நிதியுதவியும் செய்வதில்லை. என் மகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. என் கணவர் துபாயில் இருப்பதால் அவரை ஒன்றும் செய்யமுடியாது என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். எனது கணவரின் குடும்பம் அதிக செல்வாக்கு உள்ளவர்கள். இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.