‘கணவரை இழந்த சோகம்’.. 5 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 12, 2019 10:50 AM

ஊட்டியில் கணவன் இறந்த விரக்தியில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother commit suicide with daughter in Ooty lake

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஏரியில் பெண் மற்றும் குழந்தையின் சடலம் மிதப்பதாக ஜி1 காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் ஏரியில் மிதந்த இரு உடல்களையும் மீட்டுள்ளனர். இதுகுறித்து நடந்திய விசாரணையில் உயிரிழந்தவர் நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த நிர்மலா (25) மற்றும் அவரது மகள் ஹரிதா (5) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் நிர்மலாவின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அன்றிலிருந்து நிர்மலா விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. நிர்மலாவின் மகள் ஹரிதா தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியிலிருந்து மகளை அழைத்து வர சென்ற நிர்மலா வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கணவர் இறந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Photo Credits: Vikatan

Tags : #MOTHER #DAUGHTER #SUICIDE #OOTY #LAKE