‘தகாத உறவில் ஈடுபட்ட கணவன்’.. ‘படுக்கை அறையிலேயே புகுந்து மனைவி செய்த காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 14, 2019 05:14 PM

வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman thrashes husband over extramarital affair in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்த கோபால் - அனிதா தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கணவனின் நடத்தையில் அனிதாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து அவருக்கு தனது கணவன் கோபால் வேறு ஒரு பெண்ணுடன் சுபாஷ் நகரில் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்களுடன் கணவன் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவருக்கு ஆத்திரம் தீர அடி கொடுத்துள்ளார். ஆனால் அதையெல்லாம் வாங்கிக் கொண்டும் கோபால் தனது காதலியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அனிதா அவரை படுக்கை அறையிலிருந்து வெளியே இழுத்து வந்து காலணியால் சரமாரியாக அடித்துள்ளார். இதை அவர் வீடியோவாகவும் எடுத்து வெளியிட அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Tags : #HYDERABAD #TELANGANA #HUSBAND #WIFE #AFFAIR #LOVER #VIRAL #VIDEO