'நானும் மனுஷி தான், முடியல'...'கணவனின் 'ஆணுறுப்பை வெட்டி' கொண்டுபோய்'...'மனைவி' செஞ்ச கொடூர செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 07, 2019 02:00 PM

கணவரைக் கொன்று அவரின் ஆணுறுப்பை வெட்டி, நாய்க்கு உணவாக போட்ட மனைவியின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

Woman Chops Off Husband\'s Penis And Feeds It To Dogs

உக்ரைன் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஓபாரிவ் என்ற கிராமத்தில் ஒலேக்‌ஷாண்ட்ர் குடும்பம் வசித்து வந்துள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி இரவுப்பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஒலேக்‌ஷாண்ட்ர் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை நடந்த அன்று ஒலேக்‌ஷாண்ட்டரின் மனைவி மரியா, ரத்தக்காயங்களுடன் வீட்டுக்கு வெளியே நின்றதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்கள். இதையடுத்து மாரியவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்போது அதிர்ச்சியில் உறைய வைக்கும் பல தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் '' பல ஆண்டுகளாக கணவர் தன்னை சித்தரவதை செய்து வந்ததால், அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து வேலை முடிந்து வந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை, கழுத்தை நெரித்துக் கொன்ற அவர், ஆத்திரம் தீராமல் ஒரு கோடாரியைக் கொண்டு கணவரின் தலையையும் வெட்டியுள்ளார். அப்போதும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதனைத்தொடர்ந்து கணவரின் ஆணுறுப்பை வெட்டி, தான் வளர்க்கும் இரண்டு நாய்களுக்கு உணவாகப் போட்டுள்ளார். அப்போது அவர் ரத்த கறையுடன் வெளியே வந்தபோது, அவரது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மரியாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

இதற்கிடையே ஒலேக்‌ஷாண்ட்ர் தினமும் மரியாவை அடித்து துன்புறுத்துவது வழக்கம் எனவும், அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் எனவும்  அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்கள். இதனிடையே மரியா மீதான குற்றம் உறுதியானால் குறைந்தது 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

Tags : #MURDER #KILLED #PENIS #DOMESTIC ABUSE #CHOPS #HUSBAND #DOG