'நீ எங்க கூட 'தன்பால் உறவு' வச்சுக்கணும்'... 'நண்பர்களை நம்பி சென்ற இளைஞருக்கு'...'நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 15, 2019 11:51 AM

தன்பால் உறவுக்கு மறுத்த இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்த கொடூரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young boy murdered for refusing to have homosex

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். 20 வயதான இவர் நண்பர்களுடன் பல்வேறு வாட்ஸ்ஆப் குரூப்களில் இருந்துள்ளார். அவ்வாறு வாட்ஸ்ஆப் குரூப் மூலம் நாட்றம்பள்ளியை சேர்ந்த பாலாஜி (வயது 23),கார்த்திக் (வயது 22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களாக பழகிய இவர்கள் இறுதியில் சந்திக்க முடிவு செய்துள்ளார்கள்.

இதையடுத்து கடந்த மாதம் 13-ம் தேதி ஆனந்தை நாட்றம்பள்ளிக்கு வருமாறு பாலாஜியும், கார்த்திக்கும் அழைத்துள்ளார்கள். இதையடுத்து நண்பர்களை சந்திப்பதற்காக ஆனந்த் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தை சந்தித்த பாலாஜியும், கார்த்திக்கும் தங்களுடன் தன்பால் உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்கள். இதனை சற்றும் எதிர்பாராத ஆனந்த், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடும் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் பாலாஜி நண்பன் என்றும் பாராமல் ஆனந்தை கொலை செய்து அவரது சடலத்தை பச்சூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்று உள்ளனர். இதனிடையே ஆனந்தின்  சடலத்தை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தற்கொலையாக இருக்கலாம் என நினைத்து முதலில் விசாரணை மேற்கொண்டார்கள். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆனந்த் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில்  வீசப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆனந்துடைய செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்தபோது பாலாஜியும், கார்த்திக்கும் இணைந்து ஆனந்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தார்கள். இந்த சம்பவம் வேலூர் பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #SEXUALABUSE #HOMOSEXUAL #VELLOR #FRIENDS